நவீன மருத்துவம் கிடைக்காமல் போயிருந்தால் அவர் இறந்திருப்பார் என உலகின் பிரபல தொழிலதிபரும் ட்விட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மலேரியாவால் தீவிர நோய்வாய்ப்பட்ட போது குளோரோகுயின், டாக்ஸிசைக்ளின் போன்ற நவீன மருந்துகளை உட்கொண்டு அந்த நோயிலிருந்து விடுபட்டதாக எலான் மஸ்க் சமீபத்தில் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்  ட்வீட் செய்திருந்தார். அதில் “எவ்வளவுதான் தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும், மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.