எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்காக இ-மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் (EMPS 2024) கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் மின்சார பைக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மானியமும், எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 மானியமும் வழங்கப்படும். இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.