இன்று எம்ஜிஆரின் 37 வது நினைவு தினம் அன்சர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் முத்தையா ரயில் நிலையம் என்ற பெயர் சூட்டி பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். எம்ஜிஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம் என அண்ணாமலை புகழாரம் சூட்டினார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். பாஜக ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்து பேசுகின்றனர். மோடியை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில் எம்ஜிஆரை யாரிடமும் ஒப்பிடக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.