உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த திங்கர்பூர் சாலையில், கணவனை மனைவி அடித்து தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஜஹாங்கிர் மருத்துவமனை அருகே நடந்த இந்த சம்பவத்தில், பொது இடத்தில் ஒரு பெண் தனது கணவரை தாக்கி, அவரது ஆடைகளைக் கூட கிழித்து எறிந்திருக்கிறார். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையில் நடந்து கொண்டிருந்த இந்த வாக்குவாதத்தையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதலையும் பார்த்த மக்கள் கூட்டமாக திரண்டு, வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
View this post on Instagram
“>
அந்த நபர் தன்னை மற்றும் தனது குழந்தைகளை விட்டுவிட்டு ஓட முயன்றதாகக் கூறிய அந்தப் பெண், கணவனிடம் நியாயம் கேட்பதுபோல் கத்தி பேசுகிறார். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சற்று நேரத்துக்குப் பிறகு அந்த நபர் அந்தப்பகுதியை விட்டு ஓடிவிட்டார். மனைவி அவரை துரத்தியும் பிடிக்க முடியாமல் திட்டிக்கொண்டு நிற்கிறார்.
