இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே உலகில் மிகவும் வேகமாக ஓடக்கூடிய உயிரினங்களின் பட்டியலில் சிறுத்தை முதலிடத்தில் உள்ளது. ஆனால் பலமுறை வேகமாக ஓடி வேட்டையாடும் சிறுத்தையிடம் மான்கள் சிக்காமல் தப்பித்து விடும் சந்தர்ப்பங்களை அதிகமாக உள்ளன.

மானை விட சிறுத்தை வேகமாக ஓடினாலும் அது தன்னுடைய உணவுக்காக மட்டுமே ஓடுகின்றது. ஆனால் மான் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடுகிறது. பொதுவாகவே எப்போதும் பயத்திற்கு தான் ஆற்றல் அதிகமாக இருக்கும். அப்படி வேட்டையாடத் துரத்தும் சிறுத்தையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடும் மான் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.