
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதி உள்ளது. இங்குள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒரு தென்னந்தோப்பு உள்ளது. அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை சடலமாக கிடந்தது.
அந்தக் குழந்தை பிறந்து சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசி உள்ளனர். இந்த கொடூர செயலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.