தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாசர். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களையும் ஏற்று நடிப்பார். இவருக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் நாசர் ஒரு பேட்டியில் தனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் என்னுடைய அப்பா தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதன் போல் சூழ்நிலையும் மாறிவிட்டது.

என்னுடைய மூக்கு கிளி மூக்குப் போன்று இருக்கிறது என பலரும் கூறியுள்ளனர். அதோடு என்னுடைய நெற்றியும் பெரிதாக இருக்கும். பள்ளிகளில் கூட என்னை கிளி மூக்கு என்று தான் அழைப்பார்கள். இதனால் சினிமாவில் வாய்ப்பு தேட வேண்டும் என்ற சூழ்நிலை வந்த போது எனக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அந்த சமயத்தில் இயக்குனர் பாலச்சந்தர் சார் தான் என்னை அழைத்து சினிமா உலகில் எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று உருக்கமாக கூறியுள்ளார். மேலும் நாசரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.