தனது மகனுக்கு சிறு வயதில் கிடைத்த சுதந்திரமான சூழலை உருவாக்க முயற்சிப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது ‘சிண்டிலேட்டிங் சச்சின்’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசியதாவது: சிறுவயதிலேயே குடும்பத்தில் இருந்து எனக்கு ஆதரவு கிடைத்தது. அஜித் டெண்டுல்கர் (சகோதரர்) எனது பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். என் பிறந்தநாளில் நிதின் டெண்டுல்கர் (சகோதரர்) எனக்காக ஓவியம் தீட்டுவார். என் அம்மா எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அப்பா ஒரு பேராசிரியர். அவர்கள் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது மகனுக்கும் அந்த சுதந்திரமான சூழலை உருவாக்க முயற்சிக்கிறேன். நம்மை நாமே பாராட்டினால்தான் மக்கள் நம்மை மதிப்பார்கள். விளையாட்டில் கவனம் செலுத்த என் தந்தை சொன்ன அறிவுரையை இப்போது அர்ஜுனுக்கு சொல்கிறேன் என்றார்.

மேலும் அவர் தனது உரையின் போது தனது மனைவி அஞ்சலி பற்றி குறிப்பிடுகையில், “ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது எனக்கு காயம் ஏற்பட்டு 2கால்களிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் அஞ்சலி ஆஸ்திரேலியா வந்து அறுவை சிகிச்சையை ரத்து செய்துவிட்டார். காயங்களால் நான் மிகவும் விரக்தியடைந்தேன். ஆனால் அஞ்சலி என்னை அன்புடன் கவனித்துக் கொண்டார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.