2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலர் மோஹித் ஷர்மாவின் மனநிலையை குழப்பிவிட்டனர் என சேவாக் விமர்சித்தார்..

‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ (Breakfast With Champions) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரேந்திர சேவாக்கிடம் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செயல்பாடுகளை சேவாக் விமர்சித்தார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் முக்கியமான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா வீசினார். முதல் 4 பந்துகளில் 1 டாட் பால் உட்பட 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். எனவே கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் அணியின் கை ஓங்கியது.

இதற்கிடையில், 5வது பந்தை வீசும் முன், கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் மோகித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கினர். மோஹித் அதுவரை யார்க்கராக 4 பந்துகளை வீசினார், 5வது பந்து லெந்த் பந்து…ஜடேஜா அந்த பந்தை சிக்ஸருக்கு அடித்தார். பின்னர் வந்த ஜடேஜா கடைசி பந்தை லெக் சைடில் வைடாக போட  பவுண்டரி அடித்து சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இது குறித்து சேவாக் கூறுகையில், “கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளை வீசிய மோகித் சர்மாவை தனித்து விட்டிருந்தால் இன்னும் 2 யார்க்கர்களை வீசி வெற்றிபெற்று கொடுத்திருப்பார். “5வது பந்திற்கு முன் தேவையில்லாமல் அறிவுரை கூறி மோஹித் ஷர்மாவின் தெளிவான மனநிலையை குழப்பிவிட்டனர்” என்று அவர் விமர்சித்தார்.

சேவாக் மேலும் கூறுகையில், “மோஹித் ஷர்மா துல்லியமான யார்க்கர்களுடன் தனது வேலையைச் சரியாகச் செய்தார். அப்படியிருக்க கேப்டன் ஹர்திக் பாண்டியா ஏன் அவரிடம் போய் பேச வேண்டும்? 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் எதிரணி வெற்றி பெறும் என்பது ஒரு பவுலருக்குத் தெரியும்! அவர் தனது வேலையை செய்ய மாட்டாரா? பிறகு ஏன் ஒவ்வொரு பந்திற்கும் அவரிடம் சென்று பேசி அவருடைய நேரத்தையும், கவனத்தையும் வீணாக்க வேண்டும்?

கேப்டனாக ஒருஅக்கரையில், ஹர்திக் பாண்டியா மோகித் ஷர்மாவிடம் பேசி, பந்து வீச்சாளர்களுக்கு ஏதாவது தேவையா, அவரது பந்துவீச்சுக்கு ஏற்றவாறு பீல்டிங்கை அமைக்க வேண்டுமா என்று கேட்டிருக்கலாம். ஆனால் நான் அங்கு இருந்திருந்தால் கண்டிப்பாக மோஹித் ஷர்மாவை தொந்தரவு செய்திருக்க மாட்டேன்,” என்றார்.