
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய தனுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று தனுமித்ரா வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள கோவில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தனுமித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனுமித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.