
சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் முகமது நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் மகன் உள்ளான். இவர்களது வீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குளியல் அறையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முகமது நிஷாத், நாசியா, இவர்களது நண்பர் லோகேஷ், லொகேஷன் மனைவி ஜெயசக்தி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த வேலைக்கார பெண் மகேஸ்வரி, அடையாரை சேர்ந்த முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் சிறுமியை சித்திரவதை செய்து அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. போலீசாருக்கு நாசியா அளித்த வாக்குமூலத்தில் கோவை தென்னம்பாளையத்தில் எங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றோம். அப்போது வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம். அவரிடம் பேசி எங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தோம். சிறுமியை அடிமை போல நடத்தினோம். போதிய சம்பளமும் கொடுக்கவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன்பு தான் சிறுமி பூப்பெய்தினார். சொந்த ஊருக்கு சென்றால் மீண்டும் வரமாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவே இல்லை.
எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது சிறுமி அழகாக இருப்பார் என்பதால் என் கணவரின் பார்வை சிறுமியின் மீது திரும்பியது. இதனால் கோபத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறுமியை சித்திரவதை செய்ய ஆரம்பித்தேன். சிறுமியின் மீது என் கணவருக்கு வெறுப்பு வரவேண்டும் என்பதற்காக குழந்தையை சரியாக பார்க்கவில்லை என கூறி கோபத்தை உண்டாக்கினேன். லோகேஷ் அவரது மனைவி ஜெய்சக்தி ஆகியோர் வீட்டிற்கு வந்தபோது அவர்கள் எடுத்து வந்த ஒரு பொருள் தொலைந்து விட்டதாக கூறினர். சிறுமி மீது வெறுப்பு வரவேண்டும் என்பதற்காக சிறுமிதான் அதை திருடி இருப்பார் என கூறினேன். என்னுடன் சேர்ந்து அவர்களும் சிறுமியை திட்டினார்கள்.
சிறுமியின் நெஞ்சு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அயர்ன் பாக்ஸ் ஆல் சூடு வைத்துள்ளேன். சொல்லக்கூடாத இடத்தையும் காயப்படுத்தி இருக்கிறேன். நானும் என் கணவரும் சேர்ந்து சிறுமியை சித்திரவதை செய்தோம். தீபாவளியன்று என் மகனின் பிறப்புறுப்பை பிடித்து சிறுமி எழுத்து விட்டதாக குற்றம் சாட்டி சத்தம் போட்டேன். இதனால் எல்லாரும் சேர்ந்து சிறுமியை அடித்தோம். லோகேஷ் சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்ததார். அவர் மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார். சிறுமி இறந்து விட்டார் என்பதை அறிந்து அதன் பிறகு நாங்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டோம் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.