
கர்நாடக மாநிலத்தில் உள்ள போவி மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் கோபி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடனுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ஊழல் நடந்ததாக புகார் நடந்தது. இது தொடர்பாக தொட்ட பல்லாப்பூர், கலபுரகி, சிக்கபள்ளாப்பூர் இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த 11-ஆம் தேதி பத்மநாபா நகரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஜீவா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜீவா 11 பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன்.
அப்போது சிறப்பு புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி என்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். அவர் விசாரணையின் போது எனது ஆடைகளை களைந்து சயனைடு கொண்டு வந்திருக்கிறேனா என கேட்டார். இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க 25 லட்ச ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டார். அவர் அளித்த ஆவணங்களில் கையெழுத்து போட நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் என்னை கடுமையாக மிரட்டினார் என குறிப்பிட்டு இருந்தார். ஜீவாவின் சகோதரி சங்கீதா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சிறப்பு பலனைவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.