
அப்பா அம்மா அண்ணன் தங்கை என இருக்கும் குடும்பத்தில் அப்பாவுக்கு செல்ல பிள்ளையாக மகளும் அம்மாவுக்கு செல்ல பிள்ளையாக மகனும் இருப்பதுதான் வழக்கம். அப்பாக்களுக்கு எப்போதுமே மகள்தான் செல்லம் அவர்களின் பாசம் என்பது மற்ற உறவுகளை காட்டிலும் இன்றியமையாததாக இருக்கும். அத்தகைய மகளை திருமணம் செய்து வேறு ஒருவரிடம் கொடுக்கும் போது அப்பாக்களுக்கு அதிக வேதனையை ஏற்படும். இந்நிலையில் சமூக வலைதளத்தில் காணொளி என்று வெளியாகி உள்ளது.
அந்த காணொளியில் மகளை திருமணம் செய்து கொடுத்த தந்தை மருமகனின் கையைப் பிடித்துக் கொண்டு என்றாவது ஒரு நாள் உன் மனதில் மாற்றம் ஏற்பட்டு என் மகளை நேசிப்பதை நிறுத்தினால் அவளை எந்த நிலையிலும் புண்படுத்தாமல் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடு. அவளை ஒன்றும் செய்யாதே என கெஞ்சுகிறார். அதற்கு மருமகன் அதுபோல் நடக்காது என ஆறுதல் கூறுகிறார். பின்னர் எனது அருமை மகள் இனி உன்னுடையவள் என்று மகளின் கையைப் பிடித்த தந்தை மருமகனின் கையில் ஒப்படைக்கிறார்.
இதில் உணர்ச்சிவசப்பட்ட மருமகன் மாமனார் என இருவரும் தழுவி கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி உனக்கு வேண்டாம் என்றால் என் மகளை திருப்பி கொடு என்ற அர்த்தத்தில் தந்தை கூறியதை கேட்டு இப்படி ஒரு தந்தை கிடைத்தது பாக்கியம். ஒவ்வொரு தந்தையும் மருமகனிடம் இதனைக் கூற வேண்டும் என பலவாறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான காணொளியை மணப்பெண்ணான கைலி யோவ் தனது டிக் டாக் பக்கத்தில் என் அப்பா அழுவதை முதல் முறையாக நான் பார்த்துள்ளேன் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.