உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், IAS அதிகாரி ரிங்கு சிங் ராஹி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவயான் துணை வட்டாட்சியராக (SDM) புதிதாக நியமிக்கப்பட்ட அவரிடம், பணியின் முதல் நாளிலேயே சர்ச்சை எழுந்தது. ஆய்வுப்பயணமாக சென்றபோது, ஒரு பொதுக் கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை, அவர் கோபத்தில், காது பிடித்து உட்கார எழுந்து செய்ய கட்டாயப்படுத்தினார்.
இந்த நடவடிக்கையை அப்பகுதி வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்து, பொதுவெளியில் அவமதித்ததாக குற்றஞ்சாட்டினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரி நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலைமை முற்றியதோடு, அதிகாரியும் எதிர்பாராத முடிவெடுத்து, வழக்கறிஞர்கள் முன்னிலையில் காது பிடித்து உட்கார்ந்தார். மேலும் கைகள் கூப்பி மன்னிப்பும் கேட்டார்.
இந்த காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பின்னர் IAS அதிகாரி ராஹி, செய்தியாளர்களிடம் பேசிய போது, இது அவரது அலுவலகத்தின் முதல் நாளாக இருந்தது என்றும், பொதுத்தூய்மை முக்கியம் என்பதற்காக தான் அந்த நபருக்கு தண்டனை வழங்கியதாகவும் கூறினார். ஆனால் இந்த நடவடிக்கையால் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால், அவர் சுயமாக மன்னிப்புக் கேட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த சம்பவம், அதிகாரிகள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், ஒரு உயர் பதவியில் இருப்பவரும், செய்த தவறை உணர்ந்து, பொறுமையாக மன்னிப்பு கேட்பது, நிர்வாகத்தின் பண்பையும், பொறுப்பையும் வெளிக்கொணர்கிறது என்ற பாராட்டும் சமூகத்தில் எழுந்துள்ளது.
यूपी के शाहजहांपुर से चौंकाने वाला वीडियो वायरल!
IAS अफसर ने पूछा तहसील सबसे बड़ा अधिकारी कौन, मौजूद लोग बोले-वकील…फिर ने IAS ने कान पकड़कर उठक-बैठक
कोट-पैंट-टाई में IAS रिंकू सिंह राही मांगते दिखे माफी
पुवायां तहसील में हुआ हंगामा, वकीलों ने जताई नाराज़गी
हाल ही में SDM पदभार… pic.twitter.com/E5YYz0UjO6— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) July 29, 2025
