
சமீப காலமாக நாய்கள் மனிதர்களை தாக்குவது தொடர்பான செய்திகள் அதிகம் கேட்டிருப்போம். வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் யாரையும் தாக்காதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அரசு தரப்பிலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே சில இடங்களில் அது தொடர்பான தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் வெளிநாட்டில் ஒரு சிறுவன் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர் வீட்டுக்காரரின் வளர்ப்பு நாய் அந்த சிறுவனை தாக்க ஓடி வருகிறது.
இந்த சிறுவன் தான் வீட்டில் வளரும் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர் வீட்டு நாய் தனது உரிமையாளரின் மகனை கடிக்க வருவதை பார்த்த அந்த வீட்டு வளர்ப்பு நாய், உடனடியாக சிறுவனுக்கு முன்னே பாய்ந்து அந்த எதிர் வீட்டு நாய் சிறுவனுக்கு பக்கத்தில் கூட நெருங்காத அளவிற்கு அதை ஓட ஓட விரட்டி அடித்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக, செல்ல பிராணிகளை வீட்டை பாதுகாப்பதற்காக மட்டுமே சிலர் வளர்த்து வருகின்றனர்.
அப்படி வளர்க்கப்படும் நாய்கள் மட்டும்தான் இது போன்று ஆக்ரோஷமாக செயல்படுகின்றன. உண்மையில் அன்பும் பாசமும் செலுத்தி நமது வீட்டில் ஒருவராக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் இதுபோன்று ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும் இல்லை. சரியான நேரத்தில் உரிமையாளர்களை காப்பாற்றுவதிலும் சிறந்து விளங்குவதாக நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Post by @mahr0kh_milaniView on Threads