சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகளை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ ஜூன் 17ஆம் தேதி X தளத்தில் @OliLondonTV என்ற பயனரால் பகிரப்பட்டது.

அதில், பிகினி மற்றும் ஷார்ட்ஸ் அணிந்த ஒரு ஆண், பெண்கள் கழிப்பறை பகுதிக்குள் நுழைய முயற்சி செய்ததையும், பின்னர் பெண்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளியே வருவதை காணலாம். இது குழந்தைகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கழிப்பறையில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

வீடியோவில், “நீ ஒரு பெண் இல்லை… இங்கிருந்து வெளியேறு” எனக் கூறி, சில பெண்கள் அந்த ஆணிடம் கத்திக்கொண்டிருப்பதைக் கேட்கலாம்.  இந்த வீடியோ “பெண்களின் குளியலறை பாதுகாப்பை முற்றிலும் கேள்விக்குள்ளாக்குகிறது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

“பழைய காலத்தில் பெண்களின் குளியலறைக்குள் நுழைய விரும்புவர்கள் ஒளிந்தபடியே வந்திருப்பார்கள், இப்போது அவர்கள் பிரா அணிந்து திருநங்கை என்ற பெயரில் நேரடியாக நுழைகிறார்கள்” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.