கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராணி பலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ராணி புலம்பி வந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராணி தனது வீட்டிற்கு பின்புரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ராணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.