பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கடைசியாக விளையாடிய இந்து வீரர் டேனிஷ் கனேரியா. இவர் அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் நிலையில் அங்கு நடைபெற்ற சிறுபான்மையினருக்குரிய ஒரு பிரச்சனையில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் அணியில் தான் மட்டும் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறியுள்ளார். எனக்கு அப்போது என்னுடைய கேப்டன் இன்சாமம் உல் ஹக் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் மட்டும்தான் உறுதுணையாக இருந்தனர்.

மற்ற வீரர்கள் நான் வேறு மதத்தை சேர்ந்தவன் என்பதால் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். என்னுடன் சேர்ந்து அவர்கள் உணவு கூட சாப்பிட மாட்டார்கள். குறிப்பாக சையது அப்ரிடி என்னை பலமுறை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினார். ஆனால் நான் அவரிடம் மறுத்து விட்டேன்.இந்த விஷயத்தை நான் கூறுவதற்கு காரணம் சிறுபான்மையினர்கள் பிரச்சனை குறித்து கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்.

மேலும் டேனிஷ் கனேரியா, 1980ல் கராச்சியில் பிறந்தார், பாகிஸ்தான் அணிக்காக 2000 முதல் 2010 வரை 61 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.