தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மிர்ச்சி சிவா. இவர் தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி இயக்கியுள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மாகாபா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லார்க் ஸ்டூடியோஸ் சார்வில் கே. குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  படத்தின் டிரைலர் வீடியோவும்  ரிலீஸ் ஆகி நல்ல  நல்ல வரவேற்பை பெற்றது. சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்  ஆகிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நடிகர் வெற்றி சிவா மற்றும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோரை சேர்த்து இணையதளத்தில் பல்வேறு விதமான மீம்ஸ்கள் வருகிறது. இதுகுறித்து டிரைலர் வெளியீட்டு விழாவின்போது நடிகர் சிவா பேசினார். அவர் என்னையும் ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போன்று கிரிக்கெட் விளையாட முடியாது. அதேபோன்று ரோகித் சர்மாவால் என்னை போல் நடனம் ஆட முடியாது என்று நகைச்சுவையாக கூறினார்.