
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்தியா 17 வருடங்களுக்கு முன்பாக இந்திய கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனி தலைமையில் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எம்.எஸ் தோனி தன்னுடைய instagram பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் சார்பாக கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள். அதோடு என்னுடைய பிறந்தநாள் பரிசாக கோப்பையை வென்றதற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram