புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகர் பகுதியில் சேர்ந்த பழனியப்பன். இவர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கிட்டு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியினருக்கு லோக பிரியா என்ற மகள் இருந்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு பழனியப்பன் உயிரிழந்ததால் சிவகாமிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு லோக பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அண்ணன் உறவுமுறை கொண்ட சுரேஷ் என்பவர் வீட்டிற்கு வந்தார்.

அவர் லோக பிரியாவிடம் பணம் மற்றும் நகை கேட்டுள்ளார். லோகபிரியா கொடுக்க மறுத்ததால் சுரேஷ் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு 10 கிராம் தங்க சங்கிலி, செல்போன், ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷுக்கு தூக்கு தண்டனையும், கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்ததற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.