
மலையாளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக மாறியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த திரைப்படம் அமரன். இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படமானது பாக்ஸ் ஆபிஸில் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் தண்டேல் படம் வெளியானது. இந்த பாடத்தில் இவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . இப்படி தன்னுடைய நடிப்பின் மூலமாக ரசிகர்களை துவங்கு விடாமல் கட்டிப்போட்ட நடிகை சாய் பல்லவியால் 9 மணிக்கு மேல் முழித்துக் கொண்டு இருக்கவே முடியாதாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, நான் ஏன் காலை 4 மணிக்கு எழுந்திரிக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் நான் படிப்பு, வேலை என ஓட ஆரம்பித்தபோது எனக்கு இந்த பழக்கம் தொடங்கியது என்று கூறியுள்ளார். பல படப்பிடிப்புகளில் இரவு 9 மணிக்கு மேல் சென்றால் அடம் பிடித்தாவது தூங்க சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.