இன்றைய காலகட்டத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்காதா என பலரும் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் 4 லட்சம் சம்பளம் கொடுக்கிறோம் என ஒரு நிறுவனம் அறிவித்தும் இன்னும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது ஸ்காட்லாந்து நாட்டில்‌ Offshore rigger வேலைக்கு ஆள் வேண்டும் என சுமார் ஒரு மாத காலமாக விளம்பரம் கொடுக்கப்பட்டும் இன்னும் ஆள் கிடைக்கவில்லை. அதாவது ஸ்காட்லாந்தில் Aberdeen கடலோரப் பகுதியில் கடலில் எண்ணெய், எரிவாயு கிணறு அமைந்துள்ளது.

இங்கு ரிக்கர் வேலைக்கு ஆள் வேண்டும் என விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் ஒரு வருடத்திற்கு ஆறு மாத காலம் வேலை பார்த்தால் போதுமானது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஷிப்ட் படி வேலை வழங்கப்படும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்த்தால் 36 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். அதன்படி ஒரு மாதத்திற்கு 4 லட்சம் சம்பளம் கிடைக்கும் நிலையில், வருடம் முழுதும் வேலை செய்தால் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும். இந்த வேலையில் விடுப்பு போன்ற சலுகைகளும் இருக்கும் நிலையில் இன்னும் ஆள் கிடைக்கவில்லை.

ஏனெனில் இந்த வேலையில் சேர்வதற்கு சில முக்கிய பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும். அதாவது தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பயிற்சிகள் மிக முக்கியமானவை. அதன்படி இந்த வேலையில் இணைய வேண்டுமானால்‌ OGUK மருத்துவ பயிற்சி, ‌CA-EBS, FOET, BOSIET போன்ற பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சிகளை எல்லாம் முடித்து இருந்தால் தான் அந்த வேலையில் சேர முடியும் என்பதால் தான் இன்னும் வேலைக்கு ஆள் கிடைக்காததாக சொல்லப்படுகிறது.