
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையில் ஊன்றுகோலோடு வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த 2024 ஆம் வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பை வெல்ல உதவினார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சி செய்யும் இடத்திற்கு ஊன்றுகளோடு வந்து ரசிகர்களுக்கு பயிற்சி செய்யும் இடத்திற்கு வந்த அவர் இளம் வீரர்களோடு கலந்துரையாடியுள்ளார்.
அவர் தன்னுடைய சொந்த ஊரான பெங்களூரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் கர்நாடகாவில் ஒரு உள்ளூர் தொடரில் தன்னுடைய மகனுடன் பங்கேற்றபோது ராகுல் டிராவிட்டிற்கு தன்னுடைய இடது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
💗➡️🏡 pic.twitter.com/kdmckJn4bz
— Rajasthan Royals (@rajasthanroyals) March 13, 2025