
ஜார்கண்ட் மாநிலம் சைபாசாவை சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மொத்தம் 21 சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தின் கதவுகளை உடைத்து, சிசிடிவி கேமராக்களை அழித்து தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 பேர் தடுக்க முயன்றும், சிறுவர்கள் கூட்டமாக வெளியேறி சாலைபக்கம் ஓடுவதைக் காணலாம். சம்பவத்துக்குப் பின்னர் துணை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
चाईबासा के बाल सुधार गृह से बड़ी संख्या में बाल कैदियों के फरार होने की घटना सुरक्षा व्यवस्था में गंभीर चूक को दर्शाती है।
बाल सुधार गृह का उद्देश्य भटके हुए किशोरों को समाज की मुख्यधारा से जोड़ना होता है, लेकिन चाईबासा की यह घटना दर्शाती है कि सरकार बाल सुधार गृह के नाम पर… pic.twitter.com/5D1Zgnuznt
— Babulal Marandi (@yourBabulal) April 2, 2025
தப்பியோடிய 21 சிறுவர்களில் நான்கு பேரை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, இது ஒரு மிக பெரிய பாதுகாப்பு குறைபாடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தப்பிய சிறுவர்களை விரைவில் மீட்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.