உலகம் முழுவதும் பல நாடுகளில் பணப்பரிமாற்றம் மற்றும் பணம் செலுத்துவதற்கு பலரும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி வருகிறார்கள். நம்முடைய நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் google pay-யை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள் .தற்போது கூகுள் பே செயலி நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி வந்தது.

இருப்பினும்ஜூன்   4, 2024 அன்று அமெரிக்காவில் மட்டுமே நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கூகுள் வாலட் வந்த பிறகு கூகுள் பேயின் பயன்பாடு குறைந்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பேடிஎம், போன்பே பாரத் பே உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு போட்டி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.