ஹரியானா  மாநிலத்தில் உள்ள குருகிராமில் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. அப்போது வேகத்தடையின் மீது ஏறி வாகனங்கள் பறந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. வேகத்தடைக்கு முன்பு உரிய எச்சரிக்கை பலகையோ வேகத்தடைக்கான அடையாளமோ இல்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையின் மீது ஏறி பறந்து செல்கிறது அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.