விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஓவியா. இவர் வந்த முதல் சீசனில் மக்கள் மத்தியில் பல சர்ச்சைகள் எழுந்தது. பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட போட்டியாளரான ஆரவ் உடன் கிசுகிசுக்கப்பட்ட ஓவியா வெளியே சென்றதும் 90 எம்எல் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க உள்ள நிலையில் தன்னை பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்ததாக பேட்டி ஒன்றில் ஓவியா கூறியுள்ளார்.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ வீடியோவை பார்த்த ஓவியா இந்த முறை 2 பிக் பாஸ் வீடுகளா? அது எப்படி ஒன்னு சென்னையிலும் ஒன்னு பாம்பேவிலும் இருக்குமா என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் பிக் பாஸ் தொடக்க விழாவுக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஓவியா அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் போகலாமா வேண்டாமா என்று தான் யோசிக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் மீண்டும் ஓவியா வந்தால் பிக் பாஸ் டிஆர்பி எதிரும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.