
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. அதில் ஓசூர் ஜான் பாஸ்கோ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றனர். இந்த நிலையில் உடற்கல்வி கல்வி ஆசிரியரான தியாகராஜன் ஒரு மாணவியை நடுரோட்டில் வைத்து தாக்கியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போது பள்ளி ஆசிரியை ஒருவரின் கை கடிகாரத்தை அந்த மாணவி திருடிவிட்டதாக கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியை வந்து புகார் அளித்த போது உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் தங்களது மாணவிகள் திருடுவதில்லை என ஆதரவாக பேசியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே மாணவி கைக்கடிகாரத்தை திருப்பி கொடுப்பதாக கூறியதால் அதிச்சியடைந்த தியாகராஜன் சம்பந்தப்பட்ட தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்தது பற்றி கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய தாய் கோபத்தில் என் மகளை அடிங்க என கூறியுள்ளார். இதனால் நடுரோட்டில் வைத்து தியாகராஜன் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் ஜான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.