தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக முடிவடைந்தது. விஜய் அவர்கள் பேசிய அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் எதிரிகளாக பாஜக மற்றும் திமுகவினரை தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் முன்னிறுத்தி அவர்களது ஆட்சியில் நடக்கும் அவலங்களின் வீடியோ தொகுப்புகளை இணையத்தில் வெளியிட்டு அவர்களது ஆட்சி குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அதிகபடியாக திமுகவையே தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் அதிகம் விமர்சித்து வருகின்றனர்.

இவர்களுடன் இதுதான் நேரம் என அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதிமுகவும் விஜய் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல் அளித்து சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் பஸ் என கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் பேருந்து ஒன்று சாலையோரமாக நின்று கொண்டிருக்கிறது. 

அதில் வலது புறம் உள்ள பகுதி தனியாக பேருந்தில் இருந்து கழண்டு விழ அதை கயிறு மூலம் பயணிகளின் உதவியுடன் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கட்டி வைத்து பின் பேருந்து இயக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை குறிப்பிட்டு ஸ்டாலின் பஸ் என நக்கலாக ஜெயக்குமார் பதிவிட்டு இருந்தது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது.