பிரசாந்த் பாண்டியராஜ இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சூரியனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, என்னுடைய முதல் படம் மாயாநதி நடிக்கும் போது இருந்தே மதுரைக்கு வருகிறேன். அனைத்து படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வேன். 21 ஆம் தேதி முதல் என் புதிய படத்திற்கான சூட்டிங் தொடங்க உள்ளது.

இதனால் கோவிலுக்கு வந்துள்ளேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். மாமன் திரைப்படம் ஒரு குடும்ப படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மதுரைக்கு வந்து திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும். நான் வெஜிடேரியன்m மதுரை எப்போது வந்தாலும் கோவிலுக்கு தான் அதிகமாக செல்ல முடியும். மதுரையில் அசைவ உணவு நான் சாப்பிட்டது கிடையாது. சைவ உணவு தான் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை எனக் கூறியுள்ளார்.