
மதுரை மாவட்டம் பறவை வடக்கு வெள்ளி விதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். கடந்த சில மாதங்களாக நாகேந்திரனும் சிவசக்தி நகரை சேர்ந்த காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காவியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காத காவியா வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று காவியா நாகேந்திரன் இருவரும் மதுரை எஸ்பிஐ அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் காவியா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் நாகேந்திரனும் இரண்டு வருடங்களாக காதலித்தோம்.
எனது பெற்றோர் வேறு ஒருவரை கட்டாயமாக எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என்னை அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்கள். எனது விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். நான் விரும்பியவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.