
பிஜனோர் மாவட்டத்தில் கணவர் பேச்சைக் கேட்டு சட்ட விரோத செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அல்மினா என்ற பெண் தனது கணவர் குல்ஷர் சிறையில் இருந்த போது, அவருக்கு போதைப்பொருள் தேவைப்பட்டதால், போதை பொருளை தனது உடலில் மறைத்து வைத்து சிறைக்குள் எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். சிறை அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது, போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அல்மினாவின் கணவர் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும், அதை நிறுத்த முடியாமல் அவதிப்பட்ட நிலையில், அவரின் போதை பொருள் பழக்கம் அவரது மனைவியையும் சிறைக்கு அனுப்பி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை எடுத்த ஒரு மனைவியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
.