சாம்பியன்ஸ் கோப்பை 2025 இன் பி குழு போட்டியில், தென்னாப்பிரிக்காவின் ஆயிடன் மார்க்ரமுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஜல் ஹக் ஃபரூகி செய்த ஒரு செயல் அனைவரையும்  சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.

கராச்சியின் தேசிய மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியின் இறுதி ஓவரில், ஃபரூகி ஒரு சிறந்த யார்க்கர் வீசியதை மார்க்ரம் தடுப்பதோடு, ஓடி சென்று 1 ரன் எடுத்தார். ஆனால் அதன்பிறகு, ஃபரூகி தனது மார்க்கிற்கு திரும்பும் போது, நான்-ஸ்டிரைக்கர் இடத்தில் இருந்த மார்க்ரமை எதிர்பாராத விதமாக தள்ளினார். அந்தக் கணத்தில் அவர் மிகவும் ஆக்ரோஷமான  முகபாவனை கொண்டிருந்தார், ஆனால் சில அடிகள் நடந்து சென்ற  பிறகு, அவர் சற்றே சிரித்ததை கேமரா படம் பிடித்தது.

“>

 

இச்சம்பவம் நேரலையில் இருந்த கமெண்டரிகளான பொம்மி எம்பாங்க்வா மற்றும் ஷான் பொலொக் ஆகியோரை கலக்கமடையச் செய்தது. எம்பாங்க்வா, “இது நட்பு செயல் என தோன்றுகிறதா? உறுதியாக நட்பாகத்தான் இருக்கலாம்” என்று கூற, பொலொக் “நிச்சயமாகவா? எனக்கு அது நட்பு என தெரியவில்லை” என்று பதிலளித்தார். மறுபடியும் திருப்பிப் பார்த்த காட்சிகளில், மார்க்ரம் அவ்வளவு கோபமாகவும், அதிர்ச்சியாகவும் இல்லாமல், தனது பேட்டை உயர்த்தியதை காணமுடிந்தது. இதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருவரும் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.