
பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த 13ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமண விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் சில முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பாக நடிகை டாப்ஸியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எனக்கு அவர்கள் குடும்பத்தினருடன் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. திருமணம் என்பது எத்தனையோ உறவுகளுடன் கூடியது. அதன்பிறகு விருந்து கொடுக்கும் குடும்பத்தினருக்கும் விருந்து சாப்பிடும் குடும்பத்தினருக்கும் இடையே ஏதேனும் ஒரு வகையில் பந்தம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திருமணங்களில் மட்டும் தான் நான் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை டாப்ஸி அளித்த விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.