தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு துண்டுகளாக உடைந்து நிற்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“அதிமுக ஒருபோதும் இந்த அரசை ஏற்காது, நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவிக்க, அதே மேடையில் அவருக்கு நேர் எதிராகக் குதித்த எஸ்.பி.வேலுமணி, “தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும்” என அதிரடி குண்டைத் தூக்கிப் போட்டார்.
ஒரே கட்சியின் இரு முக்கியத் தலைவர்கள் சட்டமன்றத்திலேயே எதிர் எதிர் துருவங்களாக நின்று இருவேறு நிலைப்பாடுகளை அறிவித்திருப்பது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, கட்சியின் கொறடா உத்தரவு யாருக்குப் பொருந்தும் என்ற சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.
