எட்டயபுரம் அருகே பருவ மழை பொய்த்ததன் காரணமாக 950 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் கருகியது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் கிராமத்தில் 950 ஹெக்டேர் பரப்பளவில் மானவாரி விவசாயம் செய்திருக்கின்றோம்.

நடப்பு வருடத்தில் எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து விவசாய நிலங்களிலும் வடகிழக்கு பருவமழை இல்லாததன் காரணமாக பயிர் விளைச்சல் இன்றி சேதம் அடைந்திருக்கின்றது. மேலும் ஆடு, மாடுகளுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. இதனால் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.