19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பேட்டர்கள் சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

251 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், நடுவரிசை வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினர். இருப்பினும், அந்த அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தனது வெற்றியைப் பதிவு செய்தது.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது,

“உண்மையைச் சொல்லப்போனால், இவ்வளவு பெரிய இலக்கை துரத்தும்போது எங்கள் அணி 200 ரன்களைக் கடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சர்பிராஸ் கான், ஓவர்டன், பிரசாந்த் வீர் மற்றும் துபே ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கடினமான இலக்கை நோக்கிப் போராடினாலும், பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே சென்னையின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.