ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி சார்பில் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது வரை ஆம் ஆத்மி கட்சி 61 தகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கவிதா தலால் போட்டியிட உள்ளார். கவிதா தலால் WWE உள்ளிட்டவற்றில் கலந்து கொண்ட தொழில் முறை மல்யுத்த வீராங்கனை ஆவார். ஒரே தொகுதியில் இரண்டு மல்யுத்த வீராங்கனைகள் மோத உள்ளனர். மேலும் அதே தொகுதியில் பாஜக சார்பில் யோகேஷ் பைராகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.