
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விடியா திமுக அரசு வந்த பிறகு பல தடுப்பு அணைகள் கட்டுவதாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டார்கள்.
ஆனால் இதுவரை எந்த தடுப்பனையும் கட்டப்பட்டதாக தெரியவில்லை. பவானிசாகர் ஆறிலிருந்து பவானி வரை ஆறு தடுப்பணைகள் கட்டுவதற்காக அதிமுக சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதில், ஒரு தடுப்பணை தான் கட்டப்பட்டதாக தெரிகிறது. மற்ற தடுப்பணைகள் அதிமுக அரசு அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. அதிமுக ஆட்சி கொண்டு வந்த திட்டம் என்பதற்காக கிடப்பில் போட்டு விட்டார்கள். எனவே அது அறிவிப்போடு நின்றுவிட்டது. புதிய தடுப்பணை கட்டவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகளும் கைவிடப்பட்டு விட்டன. இதுதான் இந்த ஆட்சியின் அவலங்கள் என தெரிவித்துள்ளார்.