உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் அமைந்துள்ளது. இங்கு ஒரு பெண் தன் கணவர் மற்றும் சகோதரருடன் சென்றுள்ளார். அப்போது மது போதையில் மற்றொரு பெண்ணுடன் ஒரு ஆண் வந்தார். அவர் அந்த பெண்ணை பார்த்து உன்னுடைய ரேட் என்ன என்று கேட்டுள்ளார்.

அதோடு என்னுடைய அப்பா, மாமா எல்லோரும் டிஎஸ்பி என்றும் கூறியுள்ளார். இதனால்  அந்த பெண்ணின் கணவருக்கும் வாலிபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்ததோடு இதுதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் நீதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.