ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சரில் நம்ரதா பஹ்ரா(20) என்ற இளம்பெண் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த இளம்பெண் தனது நண்பர்களுடன் வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் ரயிலில் பயணித்தபடியே செல்பி எடுக்க முயன்ற போது நம்ரதா தவறி விழுந்து உயிரிழந்தார்.

உடனே ரயில்வே ஊழியர் ரயிலை நிறுத்தி நம்ரதாவின் உடலை மீட்டார். பின்னர் போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.