திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் செல்வராஜ்(59). இவர் தனியாக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி இந்திரா(51). இவர்களது இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் செல்வராஜ் இந்திரா தம்பதியினர் தங்களது மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா ஆகியோருடன் வசித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக செல்வராஜ் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் வழக்கம் போல தூங்குவதற்கு சென்றனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த சாம்ராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது தாய் தந்தை இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜ் இந்திரா ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.