கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜார்ஜ் நெல்சன்(34). கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜ் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக விரைவு ரயில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் விழுப்புரம் அருகே சென்ற போது ஜார்ஜ் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஜார்ஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.