சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அதிமுக சார்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தி.மு.க என்பது ஒரு ஊழல் கட்சி.

அவர்கள் குடும்பம் மட்டுமே வளரவேண்டும் என நினைத்த நிலையில், அதிமுக என்ற இயக்கம் உருவாகியது. DMK-வின் சொத்து பட்டியலை அண்ணாமலை இப்போது வெளியிட்டுள்ளார். அப்பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம். அதிமுக உடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல தான். அதிமுகவில் அனைவரின் சொத்து விபரங்களையும் தெளிந்த நீரோடை போன்று தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கிறோம். ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்துகொள்ளுங்கள். மடியிலே கனமில்லாதபோது வழியில் பயம் எதற்கு. தைரியமாக சொல்கிறேன் எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதனை எதிர்கொள்வோம் என்று அவர் பேசினார்.