கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவமொக்கா வினோபா நகரிலுள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா போன்றோர் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் ஈசுவரப்பா பேசியிருப்பதாவது “சாக்கடை, குடிநீர் வசதிக்காக முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனினும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் எங்களிடம் நிவாரணம் பெறக்கூடிய முஸ்லிம்கள் வாக்களிக்கின்றனர். தங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டு தேவையில்லை. இதனிடையே எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள். காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேச துரோகிகள் ஆவர்” என்று பேசினார்.