தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கிவிட்ட நிலையில் தற்போது தலைவர் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை கூறினார். அதாவது சும்மா நடித்துவிட்டு மட்டும் போகலாம். ஆனால் நமக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்ததாக தெரிவித்த அவர் தற்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நாங்கள் முடிவெடுத்திருக்கிற இந்த நிறத்தை தவிர வேறு எந்த நிறத்தையும் எங்கள் மீது பூச முடியாது.

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகிறார்கள். குடும்ப அரசியல் செய்து ஊழலில் ஈடுபடும் அந்த கட்சிதான் அரசியலில் நம்முடைய முதல் எதிரி என்று கூறினார். மேலும் ‌ தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் தான் திராவிடம் என்று கூறி வருகிறார்கள். அதோடு ஏற்கனவே வாரிசு அரசியல் நடப்பதாக திமுகவினரை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜயும் குடும்ப ஆட்சி செய்யும் கட்சி என்று மறைமுகமாக திமுகவை சாடி உள்ளதோடு அந்த கட்சிதான் முதல் எதிரி என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌

மேலும் திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு கண்கள் என்ற நடிகர் விஜய் கூறினார். முன்னதாக எந்த ஒரு மதத்தினருக்கு எதிராகவும் செயல்படும் கட்சியை நாங்கள் கிடையாது எனவும் அனைவரின் மத நம்பிக்கைக்கும் நாங்கள் மரியாதை கொடுப்போம் என்றும் விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.அதோடு நடிகர் விஜய் யாருடைய பெயரும் நேரடியாக சொல்லாமல் இப்படி தெளிவாக சொன்னதால் நமக்கு பயம் என்று கூறுவார்கள். ஆனால் மிகவும் டீசன்டாக அரசியல் செய்ய வந்துள்ளதாகவும் அதனால் யாரைப் பற்றியும் எங்களுக்கு பயம் இல்லை என்றும் விஜய் கூறினார்.