இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல் ராணுவத்தின் ஏவுகணை ஒன்று எகிப்தை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது திட்டமிட்ட தாக்குதல் இல்லை என்றும் தவறுதலாக நடந்த ஒன்று என்றும் இஸ்ரேல் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் “கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் இருந்த எகிப்து போஸ்ட் மீது எதிர்பாராத விதமாக பீரங்கி வெடித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்காக இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவிக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.