கர்நாடக மாநிலத்தில் கல்புர்கி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பாக்கியஸ்ரீ (34) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய ஊனமுற்ற மகனை பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். அப்போதே திடீரென மின்சாரம் தாக்கியது. அதாவது தன்னுடைய மகனை அவர் பேருந்து மீது ஏற்றிய போது ஏற்கனவே ஒரு மின்கம்பி அறுந்து அந்த பேருந்தின் மீது தொங்கியது.

இதனால் தாயும் மகனும் மின்சாரம் தாக்கி துடிதுடித்தனர். பின்னர் ஓட்டுநர் பேருந்தை முன்னோக்கி எடுத்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களின் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் அவருடைய மகன் அபாய கட்டத்தை தாண்டி விட்ட நிலையில் பாக்கியஸ்ரீ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். மேலும் மின்சாரம் தாக்கும்போது தாயும் மகனும் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.