தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் இருக்கும் சொகுசு விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கெட் அவுட் கையெழுத்து இயக்கம் என்று வைக்கப்பட்டுள்ள பேனரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலில் கையெழுத்து போட்டார். இதனையடுத்து பொதுச்செயலாளர் ஆனந்த் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அந்த பேனரில் கையெழுத்து போட்டனர். ஆனால் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மறுத்துவிட்டார். அந்த கையெழுத்து இயக்கம் பற்றி பிரசாந்த் கிஷோருக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.

அதன் பிறகும் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் கே.என் நேரு உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலை இல்லை. பீகார் தேர்தலில் தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்க முடியாதவர் பிரசாந்த் கிஷோர். அவர் தேர்தல் வியூகம் வகுத்தால் எப்படி இருக்கும்? திமுக அதையும் தாண்டி வெற்றி பெறும் என அமைச்சர் கூறியுள்ளார்.